முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளும்! அதன் விளக்கமும்!

0
124

புலவர் நக்கீரர் தமிழகத்தில் இருக்கின்ற முருகனின் தலைசிறந்த ஆறு கோவில்களை தேர்வு செய்து அதற்கு பெயர் திருமுருகாற்றுப்படை என்று சூட்டினார் பிற்காலத்தில் (ஆற்றுப்படை) ஆறு படைவீடு என்று அழைக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம்: சூரபத்மனை போரில் வென்ற பிறகு இந்திரன் மகளான தெய்வானையை மணந்த திருத்தலமாக திருப்பரங்குன்றம் விளங்குகிறது.

திருச்செந்தூர்: அசுரன் சூரபத்மனோடு முருகன் போரிட்டு வென்று வெற்றிவாகை சூடிய திருத்தலமாக திருச்செந்தூர் விளங்குகிறது.

பழனி: மாங்கனிக்காக தமையன் விநாயகனுடன் போட்டியிட்டு தோற்ற கோபத்தில் தண்டாயுதபாணி நின்ற இடம் தான் பழனி.

சுவாமிமலை: தன்னுடைய தந்தை சிவனுக்கு பிரணவ மந்திரத்தை ஓதி தகப்பன் சுவாமியாக முருகப்பெருமான் காட்சி தரும் திருத்தலம் தான் சுவாமிமலை.

திருத்தணி: சூரபத்மனை வதம் செய்த பிறகு கோபம் தணிந்து முருகப்பெருமான் குறவர் மகள் வள்ளியை மணந்த திருத்தலமாக திருத்தணி விளங்குகிறது.

பழமுதிர்ச்சோலை: பழம்பெரும் தமிழ் புலவர் மூதாட்டி ஔவைக்கு பழம் உதிர்த்து முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தரும் திருத்தலமாக பழமுதிர்ச்சோலை விளங்குகிறது.

Previous articleபெண்களுக்கு ஏற்படும் அடி வயிற்று வலி நிமிடத்தில் குணமாக இது ஒன்றே போதும்!!
Next articleபிரபல UPI செயலிக்கு தடை! உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு!!