தமிழக அரசின் வேலைவாய்ப்பில் காலியாக இருக்கின்ற 2748 கிராம உதவியாளர் இடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது இந்த பணிக்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும் பணிக்காக தகுதிகள் சம்பளம் மற்றும் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் உள்ளிட்ட விவரங்களை கீழே வருமாறு தெரிந்து கொள்வோம்.
பணியின் பெயர் – கிராம உதவியாளர்
சம்பளம் – 11,100-35,100 வரை
கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் வயது வரம்பு
பொது பிரிவினருக்கு 21 வயது முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம்கள் உள்ளிட்டோர் 21 வயதிலிருந்து 34 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட பிரிவை சார்ந்தவர்கள் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணிக்கான தகுதி
குறைந்தபட்சம் 5 வகுப்பு படித்திருக்க வேண்டும். சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். பணிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்ட கிராமம் அல்லது தாலுகாவில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.tn.gov.in என்ற இணையதளத்தில் what’s new பகுதியில் கிராம உதவியாளர் பணிக்கான ஆன்லைன் படிவம் கொடுக்கப்பட்டுள்ளது அதனை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் மற்ற விவரங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.