கோவையில் எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் வன்முறையை கையில் எடுக்கக் கூடாது. அவர்களுக்கு ஆதரவளிக்கக்கூடாது. அனைத்து மதமும் அமைதியாக தான் இருக்கச் சொல்கிறது. இன்று முதல் கோவை அடுத்த கட்டத்திற்கு செல்ல வேண்டும். மாநில அரசுக்கு கேள்வியை முன் வைத்துள்ளோம். அது மாநில அரசுக்கு தொந்தரவு செய்யும் நோக்கமில்லை.
அடுத்த 4 வருடங்கள் ஆட்சி இருப்பதால் சமுதாயம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கேள்விகளை முன்வைத்து இருப்பதாக தெரிவித்திருக்கிறார் அண்ணாமலை. இந்த கார் குண்டு வெடிப்பு நிகழ்வு சாதாரணமாக செய்யவில்லை. மிகப்பெரிய உயிர் சேதம் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்திருக்கிறார்கள்.
காவல்துறையின் 96 பெயரை கண்காணிக்க ஜூன் மாதம் 19ஆம் தேதி அறிக்கை விடுத்துள்ளது. அதில் 89 ஆவது நபராக முபின் இருக்கிறார். அவரை கண்காணிப்பதற்கு காவல்துறைக்கு அறிவுறுத்தியும் செய்யவில்லை என்று தெரிவித்தவர், இதுவரையில் காவல்துறை சிலிண்டர் விபத்து என்று சொல்வது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார். வெடிகுண்டு விபத்து என்றால் மக்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் மக்களை எச்சரிக்கை விடுப்பது காவல்துறையினரின் தலையாய கடமை. மக்களை சுதாரிப்பதற்க்காகவே தெரிவித்து வருகிறோம் என கூறியுள்ளார்.
ஐ எஸ் ஐ எஸ் அமைப்பினர் தவறானவர்கள் என்று இஸ்லாம் மத குருமார்களை தெரிவிக்கிறார்கள் இஸ்லாமிய மத குருமார்களை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன் அவர்கள் நேரம் தருவதாக தெரிவித்து இருக்கிறார்கள் தமிழக காவல்துறையை பாராட்டியாக வேண்டும்.
சில இடங்களில் சிஸ்டமிக் ஃபெயிலியர் ஆகி உள்ளது ஜூன் மாதம் 19ஆம் தேதி குறிப்பாக ஒரு மனிதனை காண்பித்து சொல்லும் போது அவனை கண்காணிக்க வேண்டிய பணி சாதாரண காவலர்களிடம் இருந்து காவல் துறை அதிகாரிகள் வரையில் இருக்கிறது. என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.