சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது இலங்கையின் வடக்கு கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது.
ஆகவே காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் சில பகுதிகளில் இன்று மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோன்று சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
மேலும் செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், ஈரோடு, நீலகிரி போன்ற மாவட்டங்களில் நாளையும் கனமழை பெய்யும் என்று கூறப்படுகிறது.
நேற்று காலை நிலவரத்தின் அடிப்படையில் 24 மணி நேரத்தில் மாநிலத்தில் அதிகபட்சமாக ராமேஸ்வரத்தில் 5 சென்டிமீட்டர் மழையும், குறைந்தபட்சமாக சென்னையில் 1 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.