உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! புயலாக மாறுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
267

வட கிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் மாதம் 9ம் தேதி இலங்கையை ஒட்டி இருக்கும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படக்கூடும் இது வரும் நவம்பர் மாதம் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு மற்றும் புதுவை உள்ளிட்ட பகுதிகளுக்கு இடையே கரையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புண்டு.

காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை மற்றும் நகர் தொடர்பாக தொடர்ந்து கண்காணித்து தகவல் தெரிவிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ஏற்கனவே கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பல பகுதிகளில் வெள்ளக்கார காட்சி அளிக்கிறது இந்த நிலையில் புதிதாக ஏற்படும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் மிகவும் கனமழை பெய்யுமோ அல்லது புயலாக மாறுமோ என்று பொதுமக்களிடையே அச்சம் காணப்படுகிறது.

இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. என்றும் கூறப்படுகிறது.

தலைநகர் சென்னையை பொறுத்தவரையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச நிலை 30 டிகிரி செல்சியஸில் இருந்து 31 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸில் இருந்து 24 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

Previous articleஐயோ போச்சி கலவரம் பண்ண பாக்குறாங்க! ஆர் எஸ் எஸ் அமைப்பால் கதறும் தமிழக அரசு!
Next articleகழிவுநீர் வாகனத்தில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படும் – சுற்று சூழல் துறை அமைச்சரின் அதிரடி முடிவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here