விடியா அரசே பால் விலையை பார்த்தால் கண்ணை கட்டுகிறது! போராட்டத்தை அறிவித்தார் அண்ணாமலை!

0
142

ஆவின் நிறுவனம் சார்பாக பச்சை, நீலம், ஆரஞ்சு உள்ளிட்ட நிற பாக்கெட்டுகளில் பால் விற்பனை செய்யப்படுகிறது .இந்த நிலையில், பிரீமியம் வகையான ஆரஞ்சு பாக்கெட் பாலின் விலை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.

48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு லிட்டர் ஆரஞ்சு பாக்கெட் பாலின் விலை தற்போது 60 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது அதே சமயம் ஆவினின் மற்ற பாக்கெட் பால்கள் விலை உயர்த்தப்படவில்லை.

இந்த நிலையில், பால் விலை உயர்வை கண்டிக்கும் விதமாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போராட்டம் நடைபெறும் என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

சென்னையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, பச்சிளம் குழந்தைகள் முதல் முதியோர்கள் வரையில் பாமர மக்கள் பரவலாக பயன்படுத்தும் அத்தியாவசியமான பொருளான பால் விலை ஏற்றப்பட்டு இருப்பதை பாஜக வன்மையாக கண்டிக்கிறது.

விடியலை தருகிறோம் என்று தெரிவித்து விட்டு பால் வேலையை பார்த்தால் கண்கள் இருட்டுகிறது என்று குறிப்பிட்டுள்ளார் அண்ணாமலை.

அதோடு வரும் 15ஆம் தேதி 1200 இடங்களில் பால் விலையை உயர்த்தியது, சொத்து வரி மற்றும் மின் கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினார்.

Previous articleஅய்யய்யயோ தமிழகத்தில் பயங்கரவாதம் நுழைய பாக்குது! ஆர் எஸ் எஸால் கதறும் திருமாவளவன்!
Next articleஅடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!