மகன் ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி கூட்டத்தை புறக்கணித்த பன்னீர்செல்வம்! காரணம் என்ன?

0
125

தேனி மாவட்ட ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஒருங்கிணைப்பு குழு தலைவரான தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் முரளிதரன், மாவட்ட ஊராட்சி தலைவர் பிரீத்தா, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்ரமணியன், மாவட்ட திட்ட அலுவலர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்று உள்ளார்கள்.

மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்களின் பணிகள் அவற்றின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. அதோடு இந்த 3 வருடங்களில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பாகவும் ஆய்வு செய்யப்பட்டது.

அதோடு ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு பணிகள், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டப்பணி, நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட பணி, பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்ட சாலை பணி, தூய்மை பாரத இயக்கம், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், இந்திரா காந்தி தேசிய ஓய்வூதிய திட்டம், இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டம், வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவர்களுக்கான காஸ் இணைப்பு வழங்கும் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் பணி முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. அதோடு தேனி மாவட்டத்தில் உள்ள 134 கிராம ஊராட்சிகளை சார்ந்த செயலாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றார்கள்.

வருடம் தோறும் நாடாளுமன்ற உறுப்பினர் தலைமையில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணகுமார், கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றுக் கொள்வது வழக்கம். சென்ற வருடம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்ச்சியில் நிச்சயமாக பங்கேற்றுக் கொள்ள வேண்டும். அவர்களிடம் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டுள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் நேரடியாக ஆலோசனை நடத்தி நிதி ஒதுக்கீடு செய்யுமாறும், தங்களுக்கு தங்கள் கிராமங்களுக்கு தேவையான நலத்திட்டங்களை கேட்டு பெறுவது வழக்கம் அந்த விதத்தில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் போடி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 3 பேரும் இந்த நிகழ்ச்சியை புறக்கணித்து இருக்கிறார்கள்.

Previous articleஅடுத்த நான்கு நாட்களுக்கு வெளுத்து வாங்கபோகும் கனமழை! எந்ததெந்த இடங்கள் தெரியுமா?
Next articleதமிழக நிலங்களை தன்னிச்சையாக தன்வசப்படுத்தும் கேரள அரசுக்கு வெண்சாமரம் வீசும் தமிழக அரசு! குதித்தெழுந்த பாஜக!