உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் திமுக தலைமைக்கு அதிர்ச்சி வழங்கிய உடன்பிறப்பு! மதுரையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Photo of author

By Sakthi

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை மதுரைக்குச் சென்று இருந்தார். அப்போது மாட்டு தாவணி காய்கறி மார்க்கெட்டை ஆய்வு செய்ய வர வேண்டும் என்று அங்கு இருந்தவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். அதன் அடிப்படையில் அங்கே சென்று ஆய்வு நடத்திவிட்டு அதன் பிறகு அண்ணாமலை புறப்பட்டார்.

அப்போது திமுகவின் வேட்டி கட்டிய ஒரு தொண்டர் அண்ணாமலையின் காரை நோக்கி கும்பிட்டபடியே ஓடோடி வந்தார். அதோடு அவர் அண்ணாமலைக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு சென்றார்.

இந்த சம்பவத்தை அருகில் இருந்து பார்த்த பாஜகவின் பிரமுகர்கள் தெரிவித்ததாவது, திமுக தொண்டர் ஒருவர் தன்னுடைய காரை நோக்கி ஓடி வருவதை கண்டதும் காரை நிறுத்துமாறு அண்ணாமலை தெரிவித்தார் கார். கண்ணாடியை இறக்கிவிட்டு அந்த திமுக தொண்டரிடம் உரையாடினார் என்று தெரிவித்துள்ளார்.

அண்ணாமலையின் கரங்களைப் பற்றிக் கொண்ட அந்த திமுக தொண்டர் தங்களுடைய பேச்சுக்களை நிறைய கேட்கிறேன் நியாயமாக பேசுகிறீர்கள் விளக்கமாக பேசுகிறீர்கள் எங்களுடைய குடும்பமே திமுக தான் இருந்தாலும் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் தொடர்ந்து இதே போல செயல்படுங்கள் என்று தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்.

கையெடுத்து கும்பிட்ட அண்ணாமலை அவருக்கு நன்றி தெரிவித்து அனுப்பி வைத்தார். இதே போல சம்பவங்கள் தமிழ்நாடு முழுக்க நடைபெறுகிறது. திருநெல்வேலி, கோவை, சேலம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் திமுகவினர் பலர் அண்ணாமலை சந்தித்து சென்றுள்ளார்கள். ஒரு சிலர் அண்ணாமலையுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்து வருகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

திமுகவையும், தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசுகின்றேன், இவ்வளவுக்கு பிறகும் என்னை வந்து பார்க்கிறீர்கள். இதனால் தங்களுக்கு எதுவும் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று தன்னை சந்திக்கும் திமுகவின் தெரிவித்து அண்ணாமலை தவிர்க்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. ஆனாலும் அண்ணாமலையுடன் சேர்ந்து புகைப்படமும் எடுத்துச் செல்கிறார்கள். திமுகவின் உடன்பிறப்புகள். இப்படி திமுகவினரும் விரும்பும் ஒரு நபராக வலம் வருகிறார் தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை.