செவ்வாய் தோஷம் திருமண தடையை உண்டாக்குமா? அல்லது பரிகாரம் பலம் தருமா?

0
285

செவ்வாய் தோஷம் இருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக பலருடைய வாழ்க்கையில் திருமணம் தடைபட்டுக் கொண்டே வருவதை நாம் அனுபவத்தின் மூலமாக கண்டு வருகிறோம்.

ஜாதக தோஷங்களில் மிக பிரபலமாக எல்லோரும் தெரிந்து வைத்திருக்கும் தோஷம் செவ்வாய் தோஷம் ஜாதக கட்டத்தில் லக்னம் ராசி மற்றும் சுக்கிரனுக்கு 2, 4, 7, 8, 12 உள்ளிட்ட இடங்களில் செவ்வாய் கிரகம் இருந்தால் செவ்வாய் தோஷம் அதில் சுக்கிரனுக்கு செவ்வாய் தோஷம் பார்ப்பது நடைமுறையில் சரியில்லை. சுக்கிரனும், செவ்வாயும் ஒன்றை ஒன்று ஈர்க்கும் கிரகம் என்பதால் தோஷம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை.

பாவக ரீதியாக செவ்வாய் நின்ற இடத்திற்கு ஏற்ற தோஷத்தினால் சில பாதிப்புகளை உண்டாக்க வாய்ப்பு உள்ளது பல்வேறு விதிவிலக்குகளால் சிலருக்கு தோஷ நிவர்த்தி ஏற்படும் அவ்வாறு தோசை நிவர்த்தி பெற்றாலும் கூட ரெண்டு ஏழு எட்டு ஆகிய இடத்தில் உள்ள செவ்வாய்க்கு 2,7,8ல் செவ்வாய் உள்ள ஜாதகத்தையும் 4,12ல் இடத்தில் செவ்வாய் உள்ள தோஷத்தையும் சேர்க்க வேண்டும்.

லக்னத்தை பொறுத்தவரையில் கடக லக்னம் சிம்ம லக்னம் உள்ளிட்ட லக்னத்தில் பிறந்தவர்கள் செவ்வாய் எங்கே இருந்தாலும் இந்த தோஷம் இல்லை என்று சொல்லலாம்.

செவ்வாய் இருக்கக்கூடிய 2ம் இடமானது மிதுனம் அல்லது கன்னியாக இருந்தால் தோஷம் இல்லை.

செவ்வாய் 4ம் இடத்தில் இருந்து அந்த இடம் மேஷம், விருச்சிகம் உள்ளிட்ட ராசிகளாக இருந்தால் தோஷம் இல்லை.

வேற என்ன இருக்கு அதேபோல கலக்குற ஸ்தானத்தில் செவ்வாய் இருந்து அந்த ஸ்தானம் கடகமாகவோ அல்லது மகரமாகவோ இருந்தால் தோஷம் இல்லை.

செவ்வாய் இருக்கும் 8வது இடம் தனுசு அல்லது மீனமாக இருந்தாலும் 12வது இடம் ரிஷப துலாமாக இருந்தாலும் இந்த தோஷம் இல்லை.

செவ்வாய் தோஷம் ஒருவருக்கு இருந்து ஒருவருக்கு இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது என்பது சாஸ்திரம். இருவருக்கும் இந்த தோஷம் இருந்தால் திருமணம் செய்து வைக்கலாம் என்று சொல்வார்கள். ஆனால் பொதுவாக தோஷம் ஒருவருக்கு இருந்தாலும் சரி, அல்லது இருவருக்குமே இருந்தாலும் சரி ,சரியான ஜோதிடர்களை ஆலோசனை செய்து முறைப்படி பரிகாரங்கள் செய்வது தான் சரியாக இருக்கும்.

பொதுவாக செவ்வாய் தோஷத்தால் திருமண தடையை சந்திப்பவர்கள் செவ்வாய்க்கிழமை ராகு வேலையில் சுப்பிரமணியரை சிவப்பு அரளி சாற்றி வழிபட்டால் திருமணம் நல்ல முறையில் நடந்தேறும்.

Previous articleஅறியாமல் செய்யும் இந்த தவறுதலால் உங்கள் சிறுநீரகம் சீக்கிரம் செயல் இழந்து விடும்! மக்களே எச்சரிக்கை!
Next articleசெலவே இல்லாமல் சிறுநீர் கல் கரைய எளிய டிப்ஸ்! உடனே டைப் பண்ணுங்க!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here