ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பொலார்ட் அறிவிப்பு.. இனிய நினைவுகளை பகிர்ந்த மும்பை இந்தியன்ஸ் வீரர்கள்..!

0
224
Hyderabad: Mumbai Indians' Kieron Pollard during the Final match of IPL 2019 between Chennai Super Kings and Mumbai Indians at Rajiv Gandhi International Stadium in Hyderabad, on May 12, 2019. (Photo: Surjeet Yadav/IANS)

வெஸ்ட் இன்டிஸ் அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படுபவர் பொலார்ட்.  இவரின் பேட்டிங்கிற்கும் பந்து வீச்சுக்கும் தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சர்வதேச போட்டிகளில் வெஸ்ட் இன்டிஸ் வீராக போட்டியிடும் பொலார்ட் ஐபிஎல் மும்பை இந்தியன்ஸ் அணியின் தவிர்க்க முடியாத பேட்ஸ் மேனாக அறியப்படுகிறார். பல போட்டிகளில் இவரின் பங்களிப்பு அந்த அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

சர்வதேச போட்டிகளில் இருந்து விலகுவதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவித்தார். ஆனால், அவர் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடுவார் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், ஐபிஎல்லில்  இருந்து ஓய்வு பெறுவதாக அவர் அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதே வேலையில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங்க பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக சச்சின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் வெளியிட்டுள்ள பதிவில்,  பொலார்ட் ஒரு போதும் விடைபெற முடியாது, மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங்க் பயிற்சியாளராக அவர் நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்துகள், நீங்கள் இருப்பது அனைவருக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளார்.

அந்த அணியின் கேப்டனும், சிறந்த இந்திய பேட்ஸ்மேனுமான ரோஹித் சர்மா, பொலார்டுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து அவர் பெரிய மனிதர், பெரிய தாக்கம், எல்லா நிலைகளிலும் அவர் இதய பூர்வமாக விளையாடினார் எனவும் அவர் உண்மையான லெஜண்ட் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஜஸ்பிர்த் பும்ரா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட பதிவில் எங்களுடன் இல்லாதது உங்களுக்கு பழகி விடும் அதே வேளையில் பயிற்சியின் போது நடக்கும் கேலிகளை இன்னும் ரசிக்கிறோம். உங்கள் புதிய இன்னிங்க்ஸூக்கு வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்துள்ளார். பொலார்ட் வீராராக ஓய்வு பெற்றாலும், அவர் பயிற்சியாளராக அந்த அணியில் தொடர்வது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Previous articleஇன்று உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! வரும் 18ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது! கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
Next articleசூட்கேஸில் கிடந்த ஆண் சடலத்தால் பரபரப்பு.. காவல்துறையினர் விசாரணை..!