காலையில் தொண்டைக்கு இதமாக துளசி புதினா டீ குடியுங்கள்..!

0
190

மழைக்காலத்தில் சளி , இருமல், தொண்டை பிரச்சனைகள் ஏற்படும்.அவற்றை தடுப்பதற்கு சில உணவுகளை எடுத்து கொள்ளலாம். மழைக்காலத்தில் ஜூரண சக்தியை அதிகரிக்கவும், சளி, தொண்டை பிரச்சனைகளை சரி செய்யவும் புதினாவை வைத்து சூப்பரான டீ வைத்து கொடுக்கலாம்.

தேவையானவை :

துளசி – 4 தளிர்

புதினா – 4 தளிர்

தண்ணீர் – 200 மில்லி

தேன் / நாட்டுச்சர்க்கரை / கருப்பட்டி – தேவையான அளவு

செய்முறை :

துளசி, புதினாவை நன்றாக கழுவி கொள்ளவும்.அடுப்பில் தண்ணீரை கொதிக்க வைத்து கொள்ளுங்கள்.அதனுடன் துளசி, புதினாவை போட்டு கொதிக்கவைக்கவும். அவற்றை வடிக்கட்டி தேன் அல்லது நாட்டுசக்கரை சேர்த்து பருகலாம்.

புதினா, துளசி ஆகியவற்றை சம அளவு நிழலில் காய வைத்து பொடித்து வைத்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் தண்ணீர் கொதிக்க வைத்து அதனுடன் இந்த பொடியை சேர்த்து கொதிக்கவைத்து பருகலாம்.

Previous articleஇந்த காயை தண்ணீரில் கலந்து தலையில் தடவுங்க!! நரைமுடி உடனே கருத்து விடும்!!
Next articleரிஷபம் ராசி – இன்றைய ராசிபலன்!! வாய்ப்புகள் மேம்படும் நாள்!