ஐயப்பன் சின்முத்திரையின் தத்துவம்!

0
177

சபரிமலையில் ஆனந்த சொரூபன் ஐயப்பன் அமர்ந்து தரிசனம் தரும் நிலை வித்தியாசமானது.. இது வாசன ரூபம் அதாவது யோக பிதாசனம் அல்லது யோக சித்தாசனம் என்று தெரிவிக்கலாம்.

ஐயப்பன் தபசினை காண்பிப்பதற்காகவும் பூரண தேபாவர தியான ரூபத்தில் இருக்கிறார். ஐயப்பனின் கால்களை சுற்றி உள்ள வஸ்திரத்திற்கு வஸ்திர பந்தம் அல்லது யோக பட்டம் என்று பெயர். ஐயப்பனின் வலது கை ஞான முத்திரை காட்டி நம்மை ஆசீர்வதிக்கிறது.

இந்த முறையில் மூன்று விரல் நீட்டியும் ஆள்காட்டி விரல் மடக்கி கட்டை விரலோடு சேர்கிறது இதன் பொருள் மும்மூலமாகிய ஆணவம், கண்மம், மாயை ஆகியவற்றை எவனொருவன் விட்டு, விட்டு தெய்வ சன்னதியை அடைகிறானோ, அவனுடைய ஜீவாத்மாவானது பரமாத்மாவை வந்து அடைகிறது என்று பொருளாகும்.

சுவாமியின் மூன்று நீட்டியவிரல் ஆணவம், கன்மம், மாயையும் ஆள்காட்டி விரல் ஜீவாத்மாவையும் கட்டைவிரல் பரமாத்மாவையும் குறிக்கிறது. இதை தவிர 3 விரல்களையும் சத்,சித், ஆனந்தம் சச்சிதானந்தம் என்றும் தெரிவிப்பார்கள் சின் முத்திரையுடன் பக்தர்களுக்கு தெரிவிப்பதாவது,

நான் சத்தியமும், ஆனந்தமும் ஆவேன். நான் என்னுடைய தெய்வீக ஆனந்தத்தில் தினமும் லயித்துக் கொண்டிருக்கிறேன். என்னை தரிசிக்க வருபவர்களுக்கு அவர்களுடைய சகல துன்பங்களிலிருந்தும் மோட்சம் தரும் ஆத்ம ஞானத்தையும் மூன்று காலங்களிலும் சுகம், ஐஸ்வர்யம், சாந்தி இவை அனைத்தும் கொடுத்து அருள் புரிகிறேன் என்று ஐயப்பன் சின் முத்திரை காட்டி அருள்பாலிக்கிறார்.

Previous articleகன்னி ராசி – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் கூடும் நாள்!
Next articleதுலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! அலைச்சலுக்குப்பின் ஆதாயம் கிடைக்கும் திருநாள்!