விரைவில் தயாராகிறது 6வது வந்தே பாரத் ரயில்! தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இயக்கப்படுமா?

0
157

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் வந்தே பாரத் ரயிலை இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். சென்னை, பெரம்பூர் ஐசிஎபில் தயாரிக்கப்பட்டு வரும் வந்தே பாரத் ரயிலுக்கு பயனியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் திறன் கொண்ட 5வது வந்தே பாரத் ரயில் சேவை சென்னை சென்ட்ரல் கர்நாடக மாநிலம் மைசூர் இடையே இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு நடுவே ஐசிஎப் ஆலையில் 6வது வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த புதிய ரயில் சேவை எந்த வழித்தடத்தில் இயக்கப்படும் என்று பயணியர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இது தொடர்பாக பயணியர்கள் தெரிவித்ததாவது 6வது வந்தே பாரத் ரயிலையாவது தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு இயக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது, நாட்டின் முக்கியமான வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் படிப்படியாக இயக்கப்படும் 6வது வந்தே பாரத் ரயிலை சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரயில்வே வாரியத்திற்கு பரிந்துரைக்க இருக்கின்றோம். எந்த வழித்தடத்தில் இயக்குவது என்று ரயில்வே வாரியம் தான் முடிவு செய்யும் என்று தெரிவித்திருக்கிறார்கள்.

Previous articleதப்பி தவறி இதை மட்டும் செய்து விடாதீர்கள்? மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!
Next articleசென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!