திமுக ஒரு இரட்டை நிலைப்பாட்டுடன் செயல்படும் கட்சி! முன்னாள் அமைச்சர் விளாசல்!

0
215

கோவில்பட்டியில் அதிமுகவைச் சார்ந்த முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, திமுகவில் வாரிசு அரசியல் என்பது காலத்தின் கட்டாயம் உதயநிதி மட்டுமல்ல அவருக்கு அடுத்த வாரிசு வந்தாலும் திமுகவிற்கு அவர்கள் தான் தலைமை ஏற்கும் நிலை இருக்கிறது

திமுகவினரை பார்த்து அஞ்சும் நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இருக்கிறார் வாரிசு அரசியலை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட கட்சி தான் அதிமுக. கடுமையாக உழைக்கும் தொண்டர்கள் அதிமுகவில் தலைமை பொறுப்புக்கு வரலாம் என்று கூறியுள்ளார்.

புரட்சித் தலைவர் எம் ஜி ராமச்சந்திரன் வழங்கிய இரட்டை இலை சின்னம் எங்களிடம் தான் இருக்கிறது. அதிமுக அமைப்பு தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் தான் இடைக்கால பொதுச்செயலாளராக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை தேர்வு செய்திருக்கிறார்கள்.

கருத்து வேறுபாடு போன்றவற்றின் காரணமாக பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிச்சாமி கட்சியிலிருந்து நீக்கி இருக்கிறார். இந்த பிரச்சனைக்கு உச்சநீதிமன்றம் மிக விரைவில் ஒரு நிரந்தரமான தீர்வை வழங்கும் என தெரிவித்துள்ளார்.

அதிமுக மற்றும் திமுக என்ற இரு கட்சிகள் அடிப்படையிலேயே வேறு விதம் அதிமுகவில் வாரிசு அரசியல் என்ற பேச்சு எப்போதுமே எழுவதற்கான வாய்ப்பில்லை. திமுக எப்போதும் இரட்டை நிலைபாடுகளை கொண்டிருக்கும் கட்சி பாஜகவுடன் கொள்கையில் நாங்கள் எப்போதும் சமரசம் செய்து கொள்வதில்லை.

பாஜக உடனான கூட்டணி என்பது வேறு, எங்களுடைய கொள்கை என்பது வேறு அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்கள் முடக்கப்படுமானால் நாங்கள் அதனை எதிர்த்து போராடுவோம் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

Previous articleஅடுத்த கட்ட போராட்டத்தை அறிவித்தார் அண்ணாமலை! தமிழ்நாடு முழுவதும் 5000 பகுதிகளில் தமிழக அரசுக்கு எதிராக களமிறங்கும் பாஜக!
Next articleஇனி கர்ப்பிணி பெண்களுக்கு நோய் தொற்று பரிசோதனை அவசியமில்லை! ஆனால் அவர்களுக்கு நிச்சயமாக பரிசோதனை செய்யப்பட வேண்டும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here