ஆளுநர்கள் வாரிசுகள் அடிப்படையில் நியமிக்கப்படுவதில்லை! கனிமொழியின் கருத்துக்கு தமிழ் இசை சவுந்தரராஜன் அதிரடி விளக்கம்!

Photo of author

By Sakthi

புதுவை அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக ஜன்ஜட்டியா கௌரவ் திவாஸ் விழா காட்டேரிக்குப்பம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்தது. இந்த விழாவில் புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அமைச்சர்கள் நமச்சிவாயம், சந்திரபிரியங்கா போன்றோர் பங்கேற்றுக் கொண்டனர்.

இந்த விழா முடிவற்ற பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்து பேசிய புதுவை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சில நாட்களுக்கு முன்னர் ஒரு புரட்சி இங்கே பிரிவினையை பற்றி பேசிய சமயத்தில் ராணுவ வீரர் ஒருவர் நாட்டின் எல்லையில் மக்களுக்காக தன்னுடைய வசதி வாய்ப்புகளையும், உயிரையும் பொருட்படுத்தாமல் நாங்கள் நாட்டை காப்பாற்ற துன்பப்பட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் நீங்கள் பிரிவினை தொடர்பாக உரையாடிக் கொண்டிருக்கிறீர்களே என்று தெரிவித்தார்.

இதை எதிர்க்கும் விதமாக அந்த இயக்கத்தைச் சார்ந்தவர்கள் கடலூரில் ராணுவ வீரரின் வீட்டுக்குச் சென்று அவருடைய குடும்பத்தினரை மிரட்டி துன்புறுத்தி இருக்கிறார்கள். இந்த சம்பவத்தை எந்த நேரத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ராணுவ வீரர்கள் எந்த விதத்திலும் விமர்சிப்பதை பார்த்துக் கொண்டிருக்க இயலாது என்பது அரசியலமைப்புச் சட்ட விதிகளிலேயே இருக்கிறது.

ஆகவே இது போன்ற நிகழ்வுகள் தேசப்பற்றை குறைப்பதாகவும், தேசத்திற்காக போராடும் வீரர்களை கொச்சைப்படுத்துவதாகவும் இருக்கிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் இனி நடைபெறக்கூடாது என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், அரசு வழக்கறிஞர் நியமனத்தில் வெளி மாநிலத்தைச் சார்ந்தவர்கள் சேர்க்கப்பட்டிருப்பது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கிய போது எனக்கும் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகும்.

வழக்கறிஞர்கள் தேர்வுக்கு சம்பந்தமே இல்லை. அது நேர்மறையாக அவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பட்டியல் மட்டுமே எனக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது.

அதில் ஒருவர் மட்டும்தான் சென்னையைச் சார்ந்தவர். மீதம் இருந்த எல்லோருமே புதுவையைச் சார்ந்தவர்கள் தலைமைச் செயலாளர் சட்ட செயலாளர் உள்ளிட்டோர் நேர்முகத் தேர்வு நடத்தி மதிப்பின் வழங்கி அதிகாரப்பூர்வமாக தகுதியானவர்கள் என்று அவர்கள் கொடுத்த பட்டியலின் அடிப்படையில் தான் இது நடைபெற்றது.

ஆகவே இதில் என்னுடைய பங்கு எதுவும் கிடையாது. புதுச்சேரி புறக்கணிக்கப்படுவதை என்றுமே நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். புதுச்சேரிக்காக தேவையான உதவிகளை மத்திய அரசிடம் சென்று கேட்டு வருகின்றேன் என்று ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் அளித்திருக்கிறார்.

புதுச்சேரி முதல்வருக்கும், எனக்கும் எந்த விதமான விரிசலும் கிடையாது. பாசப்பிணைப்பு தான் உள்ளது. அது செயற்கையாக உண்டாக்கப்படுகின்ற விரிசல் தான் என்று கூறியுள்ளார் தமிழிசை சௌந்தரராஜன்.

தமிழக ஆளுநர் காலாவதியானவர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தது தொடர்பான கேள்விக்கு ஆளுநர்கள் தொடர்பாக இப்படி கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். ஆளுநர்கள் சாதாரணமான மனிதர்கள் பலவும் மரியாதை கொடுக்கத் தேவையில்லாதவர்கள் என்பதை போன்ற எண்ணம் தற்போது இருக்கிறது. கருத்து சுதந்திரம் அனைவருக்கும் இருக்கிறது,

அவர்கள் கருத்துக்களை சொல்லலாம். ஆனால் ஆளுநர்கள் மிகவும் மோசமாக விமர்சனம் செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும். ஆளுநர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் தகுதியின் அடிப்படையில் அமர வைக்கப்பட்டவர்கள்.

வாரிசு அடிப்படையில் அமர வைக்கப்பட்டவர்கள் கிடையாது. இதனை அனைவரும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.