இந்த 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

0
326

திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

கேரள மாநில பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில் இன்று மற்றும் நாளை உள்ளிட்ட தினங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

நாளை மற்றும் நாளை மறுநாள் புதுவை, தமிழகம், காரைக்கால் போன்ற இடங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தலைநகர் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், நகரில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleஇவர்கள் இங்கு மருத்துவ படிப்பை தொடர முடியாது! இந்திய மருத்துவ ஆணையத்தில் இடம் இல்லை!
Next article12ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்! ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here