விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! உறவுகளின் ஆதரவு அதிகரிக்கும் நாள்!!

0
167
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சகம் – இன்றைய ராசிபலன்!! உறவுகளின் ஆதரவு அதிகரிக்கும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உறவுகளின் ஆதரவு அதிகரிக்கும் நாள். சந்திர பகவான் சுப ஸ்தானத்தில் இருப்பதால் உறவுகள் இல்லம் தேடி வந்து அனுகூலமாக செயல்படுவார்கள். நிதி அருமையாக இருக்கும்.

 

கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக உள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்காக சில செலவுகளை மேற்கொள்வீர்கள். சிலருக்கு பொன் பொருள் ஆபரணச் சேர்க்கை உண்டாகும்.

 

உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உண்டாக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தை வேறு இடங்களுக்கு மாற்றலாமா என்ற சிந்தனை மேலோங்கும். கொடுக்கல் வாங்கலில் அற்புதமான சூழ்நிலை நிலவுகிறது.

 

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் கலை கட்டி இருப்பதைக் கண்டு மனம் மகிழ்ந்து போவார்கள்.

 

நண்பர்கள் உறவினர்கள் உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் மூலம் சில நன்மைகள் உங்களுக்கு வந்து சேரும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வார்கள்.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஆரஞ்சு நிற ஆடை அணிந்து மகாலட்சுமி தாயார் வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்..

Previous articleதுலாம் – இன்றைய ராசிபலன்! குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும் நாள்!!
Next articleதனுசு – இன்றைய ராசிபலன்! எண்ணிய காரியங்கள் எளிதில் முடியும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here