மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!!உற்சாகமும் ஆற்றலும் மிகுந்த நாள்!

0
100
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!
Gemini – Today's Horoscope!! Enjoy a day of partying and fun!

மிதுனம் ராசி – இன்றைய ராசிபலன்!!உற்சாகமும் ஆற்றலும் மிகுந்த நாள்!

மிதுன ராசி அன்பர்களே ராசி அதிபதி புத பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்சாகமும் ஆற்றலும் மிகுந்த நாள். சந்திர பகவான் காலையில் பாகிஸ்தானத்திலும் மதியத்திற்கு பிறகு ஜீவனஸ்தானத்திற்கு வருவதால் காலையில் உற்சாகமும் மாலையில் ஆற்றலும் கிடைக்கும் நாள்.

கணவன் மனைவியுடைய ஒற்றுமை சிறப்பாக அமையும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள். உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரம் அருமையான பாதையில் செல்லும். கொடுக்கல் வாங்கலில் எந்தவித குழப்பமும் இல்லை.

உத்தியோகத்தில் உள்ள பெண்களுக்கு அற்புதமான தகவல் ஒன்று வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் ஆற்றலுடன் பயணிப்பார்கள். நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் இந்த நேரத்தில் உங்களுக்கு கை கொடுத்து உதவுவார்கள்.

அரசியல்வாதிகளுக்கு குழப்பமான சூழ்நிலை மறையும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரலாம். மூத்த வயது சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகிய ஆனந்தமாக இருப்பார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.