மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்! வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!

Photo of author

By Selvarani

மேஷம் ராசி – இன்றைய ராசிபலன்! வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள்!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.

இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வரவைக்காட்டிலும் செலவுகள் கூடும் நாள். குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ஓரளவிற்கு சிறப்பாக இருப்பதால் வெளியிடங்களுக்கு சென்று வருவீர்கள்.

உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் மற்றும் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் எண்ணம் உண்டாகும். அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். கொடுமை நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் குழப்பம் இன்றி செயல்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு சந்தோஷமான செய்தி காத்திருக்கிறது.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சாம்பல் நிற ஆடை அணிந்து ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.