விருச்சிக ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் திருநாள்!!

0
170
Scorpio – Today's Horoscope!! You have a busy day!
Scorpio – Today's Horoscope!! You have a busy day!

விருச்சிக ராசி – இன்றைய ராசிபலன்!! ஆற்றல் அதிகரிக்கும் திருநாள்!!

விருச்சிக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும் திருநாள். உங்களுடைய பலம் இன்று இரட்டிப்பாக அதிகரிக்கும் நாள். குடும்ப உறவு மிக சிறப்பாக உள்ளது. கணவன் மனைவியுடைய அதி அற்புதமான ஒற்றுமை உள்ளது.

 

பொருளாதாரம் சிறப்பாக உள்ளதால் நீங்கள் எடுக்கும் காரியங்கள் எல்லாம் வெற்றி அடையும். உத்தியோகத்தில் உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தை அருமையாக கவனிப்பீர்கள். ஆகையால் லாபகரமாக செல்லும். சிலருக்கு புதிய தொழில் தொடங்கும் வாய்ப்புகள் வந்து சேரும்.

 

அரசியலில் இருக்கும் அன்பர்களுக்கு மேன்மையான பதவி கிடைத்து மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் வீட்டாரின் அன்பை பெற்று மகிழ்வார்கள். உடல் ஆரோக்கியம் வெகு சிறப்பாக அமையும்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களுக்கு சந்தோஷமான செய்திகள் காத்திருக்கிறது.

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடை அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்

Previous articleதுலாம் ராசி – இன்றைய ராசிபலன்!! மேன்மைகள் அதிகரிக்கும் நாள்!!
Next articleநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமா! இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here