மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆன்மீக சிந்தனைகள் மூலம் பலனடையும் நாள்!

0
174
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!
Pisces – Today's Horoscope!! A day of rejuvenation!

மீனம் ராசி – இன்றைய ராசிபலன்!! ஆன்மீக சிந்தனைகள் மூலம் பலனடையும் நாள்!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக சிந்தனைகள் மூலம் பலனடையும் நாள். மனதில் இருக்கும் குழப்பங்கள் விலகி ஒரு தெளிவான பாதையில் செல்வீர்கள். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவியுடைய எந்தவித குழப்பமும் இல்லாமல் அருமையாக செயல்படும்.

வருமானம் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு மனக்குழப்பம் வரலாம். தொழில் மற்றும் வியாபாரம் கவனிப்பின் பெயரில் சிறப்பாக நடைபெறும். அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் ஒருவித குழப்பம் அச்சம் தோன்றலாம். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் ஆன்மீக விஷயங்களில் நாட்டம் கொள்வார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலை கண்டிப்பாக காணப்படும். மூத்த வயதில் உள்ள நண்பர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் சிறப்பாக செயல்பட்டு அற்புதமாக வெற்றி காண்பார்கள்.

இன்றைய தினம் உங்கள அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்

Previous articleமகரம் ராசி – இன்றைய ராசிபலன்!! மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!
Next articleஇல்லத்தரசிகளே இனி கவலை வேண்டாம்!! உங்கள் குழந்தைகளின் உடல் எடையை அதிகரிக்க இந்த முறையை பயன்படுத்தி பாருங்கள்!