மேஷம் – இன்றைய ராசிபலன்! கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!!

0
106
Aries – Today's Horoscope!! The day to increase his income!

மேஷம் – இன்றைய ராசிபலன்! கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான்.இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொண்டு மகிழும் நாள்.அயன சயன தானம் ஆகிய விரைய ஸ்தானத்தில் சந்திர பகவான் உள்ளதால் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் காணப்படுவீர்கள்.

 

குடும்ப உறவு சிறப்பாக உள்ளது. கணவன் மனைவி இடையே புரிதல் உணர்வு மேம்படும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உத்தியோகத்தில் பணியிடமாறுதல் சிலருக்கு உறுதியாகும். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும் அதன் மூலம் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும்.

 

அரசியலில் இருக்கும் அன்பர்கள் பயணங்கள் மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கு என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மகிழ்வார்கள்.

 

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷமான செய்தி வந்து சேரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள்.

 

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் வந்து சேரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியம் சீராக ஆனந்தமாக காணப்படுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும் .

 

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான அடர் நீல நிற ஆடை அணிந்து துர்க்கை அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் இந்த நாள் இனிமையான நாளாக உங்களுக்கு அமையும்.

Previous articleகுளிர்காலத்தில் இப்படி ஒரு டீயை போட்டு குடித்தால் கடும் குளிரையும் தாங்கலாம்! சளி இருமல் பக்கத்தில் வரவே வராது!
Next articleரிஷபம் – இன்றைய ராசிபலன்!! சொத்து சேர்க்கை உண்டாகும் நாள்!!