Breaking: துணிவு படத்தின் மாஸ் டயலாக்!! போர்க்கொடி தூக்கும் பாஜக!!
சமீபத்தில் சென்னையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும் என்று கூறியிருந்தார். இது தமிழக அரசியலில் பெரிதும் பேசுபொருளானது.திமுகவுக்கும் ஆளுநருக்கு ஏற்கனவே பல்வேறு கருத்து பூசல்கள் இருக்கும் நிலையில்,திமுகவில் ஆளுநரின் இந்த உரையானது மேலும் எதிர்ப்பை கிளப்பியது.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவையில் கூட இந்த விவகாரம் வெடித்து பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.இந்நிலையில் இன்று திரையரங்குகளில் வெளியான துணிவு படத்தில் இடம் பெற்றிருக்கும் ஒரு டயலாக் ஆனது தற்போதைய நடக்கும் அரசியல் பிரச்சினையை பிரதிபலிக்கும் விதமாக அமைந்துள்ளது.
துணிவு திரைப்படத்தில் ‘ரவி’ந்தர் இது தமிழ்நாடு இங்க வந்து உன் வேலையை காட்டாத என்ற டயலாக் இடம் பெற்றுள்ளது.இந்த டயலாக் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ள ஆளுநரை சுட்டிக்காட்டுவது போல் பெயரும் டயலாக்கும் எதிர்பாரா விதமாக அமைந்துள்ளது.எனவே இந்த டயலாக் எதிராக பாஜக தரப்பில் கண்டனமும் போர்கொடியும் தூக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.