மின்சார பேருந்து இன்று முதல் இயக்கம்! கே.எஸ்.ஆர்.டி.சி வெளியிட்ட தகவல்!
கர்நாடகத்தில் அதிகளவு சுற்றுசூழல் மாசு ஏற்படுகின்றது.அதனை தடுக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.அதனால் பெட்ரோல் ,டீசல் பேருந்துகளுக்கு பதிலாக மின்சார பேருந்துகள் இயக்க அரசு முடிவு செய்தது. இந்நிலையில் முதல்கட்டமாக பெங்களூரு மெட்ரோபாலிட்டன் போக்குவரத்து கழகம் பி.எம்.டி.சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த அறிவிப்பில் மின்சார பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அதனைத்தொடர்ந்து கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மின்சார பேருந்து சேவை தொடங்கும் முன்பு சோதனை ஓட்டமாக பெங்களூருவில் இருந்து ராமநகர் வரை நேற்று முன்தினம் நடத்தப்பட்டது.அந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றது அதனால் மின்சார பஸ்களை மற்ற மாவட்டங்களுக்கு இயக்க கே.எஸ்.ஆர்.டி.சி முடிவு செய்யப்பட்டது.
மேலும் இன்று முதல் மின்சார பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 43 பேர் பயணிக்கலாம்.ஒரு இருக்கைக்கு மற்றொரு இருக்கைக்கு 12 மீட்டர் இடைவெளி விடப்பட்டுள்ளது.அதனால் அனைவருக்கும் வசதியாக அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கே.எஸ்.ஆர்.டி.சி அதிகாரி கூறுகையில் இந்த மின்சார பேருந்து எந்த ஒரு இரைச்சல் சத்தம் இல்லாமல், மாசு புகை ஏற்படாமல் உயர்தர வசதியுடன் மக்கள் பயணம் செய்யலாம் என தெரிவித்தார்.இந்த மின்சார பேருந்து பெங்களூரு மற்றும் மைசூரு இடையே ரூ 300 கட்டணம் வசூல் செய்யப்படும்.இந்த மின்சார பேருந்தை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 320 கிலோ மீட்டர் வரை இயக்கமுடியும்.முதல் கட்டமாக 20 பஸ்கள் இந்த மாத இறுதிக்குள் இயக்கப்படும்.மீதமுள்ள பஸ்கள் அடுத்த மாதம் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.