ரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நல்லதே நடக்கும் நாள்!!

0
260

ரிஷபம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு நல்லதே நடக்கும் நாள்!!

ரிஷப ராசி அன்பர்களே ராசி அதிபதி சுக்கிர பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு நல்லவர்களின் சவகாசத்தால் நல்லதே நடக்கும் நாள். அந்நிய தேசங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிப்பதால் விருந்து மற்றும் கேளிக்கைகளில் கலந்து கொள்வதற்காக வெளியிடங்களுக்கு சென்று மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களில் இல்லம் தேடி வந்து உங்களுக்கு நன்மையை செய்வார்கள்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரலாம். பொருளாதாரம் செழிப்பாக இருப்பதால் சேமிக்கும் எண்ணம் உண்டாகும். இல்லத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடப்பதற்கு உண்டான வாய்ப்புகள் வந்து சேரும்.

உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்த படுத்தும்.

மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் புதுமனை புது வீடு வாங்கி மகிழ்வார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உங்களுக்கு அனுசரணையாக நடந்து கொள்வது உங்களுக்கு சந்தோஷமாக இருக்கும்.

கொடுக்கல் வாங்கல்கள் சிறப்பாக செல்லும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு சந்தோஷ செய்தி ஒன்று வந்து சேரலாம். இல்லத்தரசிகளுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்களுக்கு விடை கிடைக்கும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் ஆனந்தமாக காணப்படுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான பச்சை நிற ஆடை அணிந்து ஸ்ரீ மீனாட்சி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleமேஷம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு விழிப்புணர்ச்சியுடன் இருக்க வேண்டிய நாள்!!
Next articleமிதுனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு அன்றாட வேலை நன்றாக நடைபெறும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here