மீனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

0
254

மீனம்- இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள்!!

மீன ராசி அன்பர்களே ராசி அதிபதி குரு பகவான். இன்றைய தினம் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக வந்து பேசுவார்கள்.

வருமானம் எதிர்பார்த்த படி வந்து சேரும். செலவுகளும் வரிசையாக நின்று உங்களை திக்கு முக்காட வைக்கும். பொருளாதார முன்னேற்றம் சற்று ஏற்றம் இறக்கம் நிறைந்ததாக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிட மாறுதல் உறுதியாகலாம். தொழில் மற்றும் வியாபாரம் தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாடு தேவைப்படும்.

மாணவ மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமாக செலவுகளை மேற்கொள்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உறவினர்கள் வருகையால் இல்லம் களைகட்டி இருப்பதை கண்டு மனம் மகிழ்ந்து போவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்த பெருமூச்சு விடுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிகப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் நல்லதே நடக்கும் சுபிட்சங்கள் அதிகரிக்கும் வாழ்க வளமுடன்.

Previous articleஇந்த ஒரு பொருள் போதும்! உங்கள் BP யை கட்டுக்குள் கொண்டு வரலாம்! 
Next articleஉங்களுக்கு உயர் ரத்த அழுத்தமா? BP யை குறைக்கக்கூடிய உணவு வகைகள்! 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here