மகரம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!
மகர ராசி அன்பர்களே ராசி அதிபதி சனி பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு உற்றார் உறவினர்கள் வருகை இல்லத்தில் இருப்பதால் மகிழ்ச்சிகரமான சூழ்நிலைகளை காண்பீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உறவினர்கள் உங்கள் இல்லம் தேடி வருவார்கள்.
வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணியிட மாறுதல் உறுதியாகலாம். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். உடல் ஆரோக்கியம் வெகு சிறப்பாகவும் சீராகவும் இருக்கும்.
மாணவ மாணவிகள் கல்வியில் முன்னேற்றம் காண்பார்கள். அரசியல்வாதிகள் மேடைப்பேச்சுகளில் கொடி கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைத்து மகிழ்வார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு மகிழ்வீர்கள். கொடுக்கல் வாங்கல் சிறப்பாக செல்லும். காதலர்கள் சந்தோஷமாக இருப்பார்கள்.
உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்களுக்கு உற்றார் உறவினர்கள் வருகையால் எல்லாம் களைகட்டி இருப்பதை கண்டு மனம் மகிழ்ந்து போவார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் சிறப்பான பயண வாய்ப்புகள் மேம்படுவதால் மகிழ்ச்சியாக காணப்படுவார்கள்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.