விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

0
212

விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சந்திர பகவான் கலஸ்திர ஸ்தானத்தில் ரோகினி நட்சத்திரத்துடன் இருப்பதால் சந்தோஷம் இரட்டிப்பாக கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் விலகும். கணவன் மனைவியிடையே அதி அற்புதமான ஒற்றுமை காணப்படும்.

வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். உபயோகத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைப்பதற்கு உண்டான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தை அபிவிருத்தி செய்யும் எண்ணம் மேலோங்கும்.

அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு புதுமனை புது வீடு வாங்கி மகிழும் வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வருமான வாய்ப்புகள் உறுதியாகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் கணவன் வீட்டாரிடம் சில நன்மைகளை கிடைக்க பெறுவார்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் சந்தோஷமான சூழ்நிலை நிலவும். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராகி ஆனந்தமாக நடைபெறுவார்கள். வெளிநாட்டில் வசிக்கும் மன்னர்களுக்கு மகிழ்ச்சி தரும் சம்பவம் ஒன்று வந்து சேரும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு அதி அற்புதமான நாளாக அமையும்.

Previous articleதுலாம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு சந்தோஷமாக இருக்க வேண்டிய நாள்!!
Next articleதனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here