மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

0
222

மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள். திடீரென பிரயாண வாய்ப்பு ஒன்று வரும் அது வெளியூர் பிரயாணமாகவும் இருக்கலாம் அல்லது வெளிநாட்டு பிரயாணமாகவும் இருக்கலாம். அந்த பிரயாணங்களின் மூலம் உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். நிதி நிலைமை ஓரளவிற்கு வந்து சேரும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவு கரம் நீட்டுவார்கள்.

உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உருவாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக பயண வாய்ப்புகள் மேம்படும். கொடுக்கல் வாங்கல்கள் மிகச் சிறப்பான பாதையில் செல்லும். உத்தியோகத்தில் இருக்கும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் காலதாமதம் ஆகும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைப்பிடிப்பார்கள்.

நண்பர்கள் உறவினர்கள் உடன் பிறந்த சகோதர சகோதரிகள் அனுகூலமாக செயல்படுவது உங்கள் மனதிற்கு மன ஆறுதலை அளிக்கும். அரசியல்வாதிகள் பயணங்கள் மேற்கொள்வார்கள். கலைத்துறையை சேர்ந்த அன்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மகிழ்வார்கள். மூத்த வயதை சேர்ந்தவர்கள் உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு மாற்று மருத்துவத்தை நாடுவார்கள்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான ஊதா நிறம் ஆடை அணிந்து ஸ்ரீதேவி கருமாரி அம்மனை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleஇந்த ஒரு டம்ளர் நீரை குடித்தால் போதும்!!! சர்க்கரை நோய் இதய நோய் கல்லீரல் நோய் உடல் பருமன் உள்ளிட்ட அனைத்து பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு!!
Next articleரிஷபம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் அதிகரிக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here