கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வெற்றிகள் குவியும் நாள்!!

0
226

கன்னி -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு வெற்றிகள் குவியும் நாள்!!

கன்னி ராசி அன்பர்களே ராசி அதிபதி புதபகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு வெற்றிகள் குவியும் நாள். அதிகாலையில் உங்களுக்கு அற்புதமாக உள்ளதால் நுணுக்கமாக வேலைகளை செய்து முடித்து வெற்றி அடைவீர்கள்.

குடும்ப உறவு கலகலப்புடன் காணப்படும். கணவன் மனைவி இடையே அதி அற்புதமான புரிதல் உணர்வு மேம்படும். வருமானம் நீங்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கலாம். உத்தியோகத்தில் ஆற்றல் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும்.

அரசியலில் இருக்கும் நண்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். கலைத் துறையில் இருக்கும் நண்பர்களுக்கு வாய்ப்புகள் வருவதில் இருந்து வந்த தடை தாமதங்கள் விலகும்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் தனி மரியாதை கிடைக்கும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவார்கள். உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வீர்கள்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் உடல் ஆரோக்கியத்தில் தனி அக்கறை எடுத்துக் கொள்வார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு ஆற்றல் அதிகரிக்கும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடை அணிந்து எம்பெருமான் முருகப்பெருமானை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous articleசிம்மம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு கலகலப்பிற்கு குறைவில்லாத நாள்!!
Next articleஇதனை வாயில் வைத்தாலே போதும் நெஞ்சு சளி அறுத்தெடுக்கும்!! இனி ஆயிரக்கணக்கில் செலவு செய்ய தேவை இல்லை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here