விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

0
294

விருச்சிகம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாள்!!

விருச்சக ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு பயண வாய்ப்புகள் மேம்படும் நாளாக உள்ளது. திடீரென வெளியூர் பிரயாணம் ஒன்று வரலாம். அதனால் மனதில் இருந்து வந்த சில பிரச்சனைகள் ஓய்ந்து ஆதாயம் வந்து சேரும்.

குடும்ப உறவு சுபிட்சமாக இருக்கு கவலை கொள்ள தேவையில்லை. கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக உள்ளது. வருமானம் அனுகூலமாக வந்து சேரும். உத்தியோகத்தில் பணியிட மாறுதல் சிலருக்கு உண்டாகும். தொழில் மற்றும் வியாபார தொடர்பாக ஏற்படும் பயண வாய்ப்புகள் உங்களுக்கு புதிய ஒப்பந்தங்களை கொண்டு வந்து தரும்.

அரசியலில் இருக்கும் நண்பர்கள் பயணங்களை மேற்கொள்வதால் மக்களின் செல்வாக்கை அதிகரிக்க பெறுவார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்கள் வெளியூர் கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வார்கள்.

உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் உற்றார் உறவினர்கள் வருகையால் இல்லம் களைகட்டி இருப்பதைக் கண்டு மன மகிழ்ந்து போவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வது அவசியம்.

மாணவ மாணவிகளுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழ்நிலைகள் வந்து சேரும். மூத்த வயதில் உள்ள அன்பர்கள் திடீரென வெளியூர் பிரயாணம் ஒன்றை மேற்கொள்வார்கள். வெளிநாட்டில் இருக்கும் அன்பர்களுக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும்.

இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான மஞ்சள் நிற ஆடைய அணிந்து குரு தட்சிணாமூர்த்தி சுவாமியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.

Previous article10 நாட்கள் இதை குடித்தால் போதும்!! 100 வயது ஆகும் வரை சர்க்கரை நோய் வரவே வராது!!
Next articleதனுசு -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு மனதில் தைரியம் ஊற்றெடுக்கும் நாள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here