மேஷம் -இன்றைய ராசிபலன்!! இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக ஈடுபாடு உண்டாகும் நாள்!!
மேஷ ராசி அன்பர்களே ராசி அதிபதி செவ்வாய் பகவான். இன்றைக்கு இந்த நாள் உங்களுக்கு ஆன்மீக ஈடுபாடு உண்டாகும் நாள். அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள் அதன் மூலம் உள்ளம் தெளிவாக காணப்படும். குடும்ப உறவு மற்றும் கணவன் மனைவி இடையே ஒற்றுமை ஓரளவிற்கு சிறப்பாக இருக்கும்.
வருமானம் வந்து சேர்வதில் கால தாமதம் ஆகலாம். உத்தியோகத்தில் வேலை பளு குறையும். தொழில் மற்றும் வியாபாரம் அற்புதமாக நடைபெறும்.
அரசியலில் இருக்கும் நண்பர்கள் கொடிக்கட்டி பறப்பார்கள். கலைத்துறையை சேர்ந்த நண்பர்களுக்கு வாய்ப்புகள் வந்து சேரும். உத்தியோகம் செல்லும் பெண்களுக்கு மனதில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் குழந்தைகள் மூலம் சில நன்மைகளை பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருப்பதற்கு உணவு கட்டுப்பாட்டை மேற்கொள்வீர்கள்.
மாணவ மாணவிகள் கல்வியில் அதிக கவனம் செலுத்துவார்கள். மூத்த வயதை சேர்ந்த நண்பர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தை கடைபிடிப்பார்கள். வெளிநாட்டில் வசிக்கும் நண்பர்களுக்கு ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும்.
இன்றைய தினம் உங்கள் அதிர்ஷ்ட நிறமான வெண்மை நிற ஆடை அணிந்து ஸ்ரீ சரஸ்வதி தேவியை வணங்கி வழிபட்டு வாருங்கள் கண்டிப்பாக இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும்.