வெளியான +2 தேர்வு முடிவுகள். தமிழில் இரண்டு பேர் மட்டும் தானா!
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் ஒவ்வொரு பாடத்திலும் 100 மதிப்பெண்கள் முழுமையாக பெற்றவர்களின் விவரமும் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி தொடங்கிய பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் 3ம் தேதி முடிந்தது. இதையடுத்து இன்று பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகிள்ளது.
இந்த தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இன்று வெளியான பொதுத் தேர்வு முடிவில் தமிழ் நாட்டில் 94.03 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகள் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் அதிகம் தேர்ச்சி பெற்றோர்களின் பட்டியிலில் விருதுநகர் முதல் இடமும், திருப்பூர் இரண்டாம் இடமும், பெரம்பலூர் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
இதையடுத்து 100 மதிப்பெண்களை முழுமையாக பெற்றவர்களின் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் தமிழ் மொழிப் பாடத்தில் 2 பேர் மட்டுமே 100க்கு 100 மதிப்பெண்களை முழுமையாக பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் 15 பேர் முழு மதிப்பெண்களை பெற்றுள்ளனர்.
100 மதிப்பெண்களை முழுமையாக பெற்றவர்களின் விவரம்:
தமிழ் மொழிப் பாடம் – 2 பேர்
ஆங்கிலம் மொழிப் பாடம் – 15 பேர்
கணிதம் – 690 பேர்
இயற்பியல் – 812 பேர்
வேதியியல் – 3909 பேர்
உயிரியல் – 1494 பேர்
தாவரவியல் – 340 பேர்
விலங்கியல் – 154 பேர்
கணிணி அறிவியல் – 4618 பேர்.