செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் பணம் கொடுக்கலாமா!! கொடுக்கக் கூடாதா!!

0
216
#image_title

செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் பணம் கொடுக்கலாமா!! கொடுக்கக் கூடாதா!!

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மற்றவர்களுக்கு பணம் கொடுக்கக் கூடாது மற்றும் செலவு செய்யக்கூடாது என்று கூறுவார்கள். ஏன் அவ்வாறு கூறுகிறார்கள் என்பதை பற்றி தெளிவாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

செவ்வாய் கிழமை முருகருக்கும், வெள்ளிக் கிழமை லக்ஷ்மி அம்பாளுக்கும் உகந்த நாட்களாக கருதப்படுகிறது. நாம் வணங்கும் இந்த இரண்டு தெய்வங்களும் நமக்கு செல்வ வளத்தை கொடுப்பதுடன், அவைகள் நமது வீட்டில் நிரந்தரமாக இருப்பதற்கும் அருள்புரிகிறார்கள்.

இதனால் நாம் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பணம் வைத்து இருக்கும் பெட்டியில் இருந்து பணத்தை எடுத்து செலவு செய்வதை தவிர்க்க வேண்டும்.இல்லையெனில், நம்மிடம் இருக்கு. அனைத்து செல்வ வளங்களும் நம்மை விட்டு சென்று விடும் என்பது ஒரு ஐதீகமாகும்.

மகாலஷ்மிக்குரிய அந்த நாளில் புதியதாக ஒரு பொருளை பெற வேண்டுமே தவிர இழக்க கூடாது என்பது நம்பிக்கை. நகம் முடி இரண்டுமே வெட்டினாலும் வளர்வது என்றாலும் அதுவும் நமது உடலில் ஒரு அங்கமாகும்.

ஒருவருக்கு பணம் கொடுக்க வேண்டும் என்றால் வாசப்பாடியில் நின்று கொடுக்கக் கூடாது. கொடுப்பவரும், வாங்குபவரும் வாசற்படிக்கு உள்ளே இருந்து வாங்க வேண்டும் அல்லது வெளியே இருந்து வாங்க வேண்டும்.