எட்டாவது இடத்திலிருந்து மூன்றாவது இடம்!! மும்பை அணி ரசிகர்கள் மகிழ்ச்சி!!
நேற்று நடந்த போட்டியில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 8வது இடத்தில் இருந்த மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறியதை அடுத்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளனர்.
நேற்று மும்பையில் நடந்த ஐபிஎல் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஃபாப் டுபிளிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்தது.
200 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூரியக்குமார் யாதவ் ஆடிய அதிரடி ஆட்டத்தால் 16.3 ஓவர்களில் இலக்கை அடைந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் 12 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.