மின்தடை பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம்.. குட்டையை குழப்பி விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!! 

0
308
aiadmk-is-responsible-for-the-power-outage-problem-minister-senthil-balaji-has-confused-the-well
aiadmk-is-responsible-for-the-power-outage-problem-minister-senthil-balaji-has-confused-the-well

மின்தடை பிரச்சனைக்கு அதிமுக தான் காரணம்.. குட்டையை குழப்பி விட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி!!

கோடை காலம் என ஆரம்பித்து விட்டாலே பெரும்பாலும் மின்சாரத்தின் தேவை என்பது அதிகமாக தான் இருக்கும். இந்நிலையில் திமுக என்று கூறினாலே மின் தட்டுப்பாடு உண்டாகும் என மக்கள் மனதில் ஆழமாக பதிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு ஏற்றார் போல தான் கடந்த இரு தினங்களாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் மின் தட்டுப்பாடானது அதிகமாக காணப்பட்டது. இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நிருபர்கள் கேட்ட பொழுது அவர் கூறியதாவது,

கடந்த இரண்டு நாட்களாக சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் மின் தட்டுப்பாடானது அதிக அளவில் காணப்பட்டது. தற்பொழுது அதனை படிப்படியாக குறைத்து வருகிறோம். மேலும் தற்பொழுது கோடை காலம் என்பதால் இரவு நேரங்களில் அதிக அளவிலான மின்சார தேவை உள்ளது.

அந்த வகையில் கிட்டத்தட்ட சென்னையில் மட்டுமே 3840 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு தான் அடுத்த ஆண்டு அனல் மின் நிலையத்தில் மூன்றாவது அலகில் மின்சாரம் தயாரிப்பதற்கான ஆயத்த பணிகள் தற்போது இருந்தே தொடங்கப்பட்டு விட்டது.

எனவே அடுத்த ஆண்டு முதல் தமிழகத்திற்கு தேவையான மின்சாரத்தை நாமே உற்பத்தி செய்து கொள்ளும் அளவிற்கு வந்து விடுவோம். அதேபோல திமுக ஆட்சி வந்தால் தான் மின்தடை ஏற்படுகிறது என்று கூறுவது முற்றிலும் பொய்யான கருத்து. ஏனென்றால், அதிமுக ஆட்சியில் இருந்த பொழுதும் இதுபோல பல்வேறு புகார்கள் இருந்துள்ளது, அதற்கென்று ரெக்கார்டும் என்னிடம் இருக்கிறது.

குறிப்பாக அதிமுக ஆட்சியில் இருந்த பொழுது மின்துறை சம்பந்தமாக பல வேலைகளை செய்யாமல் அப்படியே விட்டு சென்றதால் அதனை சீரமைக்கும் முயற்சியில் தற்பொழுது நாங்கள் ஈடுபட்டு உள்ளோம்.அதனால் தான் மின்சார தடை ஏற்படுகிறது. மேலும் மின்சார தடைக்கும் மின் வெட்டுக்கும் அதிக அளவு வித்தியாசங்கள் உள்ள நிலையில் மக்கள் இதனை சரியாக புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையில் மின்சார தடை என்பது மின் உற்பத்தியில் ஏற்படும் கோளாறுகளை சரி செய்யும் பணிகள் செய்வதற்காக நிறுத்தப்படுவது ஆகும். இதுவே மின்வெட்டு என்பது போதுமான அளவு மின்சார உற்பத்தி இல்லாததால் உண்டாவது. ஆனால் ஊடகங்கள் இதனை ஒரே அர்த்தத்தில் மக்களிடம் செய்தியாக கொண்டு சேர்க்கின்றனர்.

இது முற்றிலும் தவறானது என கூறினார். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின்துறை சம்பந்தமாக பல அப்டேட்கள் கொடுத்தும், தற்பொழுது வரை மக்களுக்கு மின்தடை என்ற பிரச்சனை இருந்து தான் வருகிறது.இதைப்பற்றி கேட்கையில் ஊடகங்களுக்காகவும் மக்களுக்காகவும் சப்பை கட்டு கட்டும் விதமாக அமைச்சர்கள் இவ்வாறான பதிலை கூறி வருகின்றனர்.

Previous articleவிஜயின் அடுத்த பட ஹீரோயின்!! தேர்வு செய்த வெங்கட் பிரபு!!
Next articleஐஸ்வர்யா செய்த காரியம் !! லால் சலாம் படப்பிடிப்பில் இருந்து கடுப்பில் கிளம்பிய ரஜினி!!