பிரம்மாண்டமாக நடக்க இருக்கும் பதவியேற்பு விழா! 6 மாநில முதல்வர்களுக்கு அழைப்பு!
பலத்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் நாளை அதாவது மே 20ம் தேதி கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் பதவியேற்பு விழா நடக்கவுள்ளது. இந்த பதவியேற்பு விழாவை பிரம்மாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதில் சித்தராமையா அவர்களுக்கும் டி கே சிவக்குமார் அவர்களுக்கும் கடும் போட்டி நிலவி வந்தது.
இதையடுத்து கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா அவர்களும், துணை முதலமைச்சராக டி.கே சிவக்குமார் அவர்களும் ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து முதலமைச்சர் பதவியேற்பு விழா நாளை அதாவது மே 20ம் தேதி பெங்களூரூவில் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவிக்கப்பட்டது.
நாளை நடைபெறவிருக்கும் பதவியேற்பு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பேனர்ஜி உள்பட 6 மாநில முதலமைச்சர்களுக்கு இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டுள்ளது. மேலும் இதில் பல முக்கிய அரசியல் தலைவர்களும் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளப் போகிறார்கள்.