இனிமேல் யூடியூபில் விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடியாது!! அதிரடியாக அறிவித்த யூடியூப் நிறுவனம்!!

0
249
You can no longer skip ads on YouTube!! The YouTube company announced in action!!
You can no longer skip ads on YouTube!! The YouTube company announced in action!!
இனிமேல் யூடியூபில் விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடியாது!! அதிரடியாக அறிவித்த யூடியூப் நிறுவனம்!!
தொலைக்காட்சியில் யூடியூப் பார்ப்பவர்களுக்கு அந்த நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. அதாவது இனிமேல் யூடியூப் வலைதளத்தை தொலைக்காட்சியில் பார்க்கும் பொழுது விளம்பரத்தை ஸ்கிப் செய்ய முடியாது என்று யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்றைய காலகட்டத்தில் யூடியூப் நிறுவனம் அதனுடைய பயனர்களுக்கு யூடியூப் செயலியில் பல்வேறு விதமான வசதிகளை வழங்கி வருகின்றது. அவர்களுக்கு மட்டுமில்லாமல் யூடியூப் கிரியேட்டர்ஸ்க்கும் பல வசதிகளை செய்து தருகின்றது. இதையடுத்து யூடியூப் நிறுவனம் தொலைக்காட்சி யூடியூப் பயனாளர்களுக்கு அதிர்ச்சி தகவலை பகிர்ந்துள்ளது.
செல்போன்களில் யூடியூப் செயலியை பார்க்கும் பொழுது 30 வினாடி விளம்பரங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு 15 வினாடிகள் விளம்பரங்களாக இரண்டு முறை வரும். அதில் 5 வினாடி கழித்து விளம்பரத்தை ஸ்கிப் செய்து கொள்ளலாம். அதே போல யூடியூப் வலைதளத்திற்கு சென்று பார்த்தாலும் இதே நடைமுறை தான். இந்த நடைமுறையை இனி ஸ்கிப் செய்ய முடியாத அளவுக்கு  யூடியூப் தளம் தகவலை பகிர்ந்துள்ளது.
இனிமேல் தொலைக்காட்சியில் யூடியூப் பார்க்கும் பொழுது விளம்பரங்களை ஸ்கிப் செய்ய முடியாது என்று யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. தொலைக்காட்சியில் யூடியூப் வலைதளத்தில் வழங்கப்படும் இரண்டு 15 வினாடிகள் கொண்ட விளம்பரங்களுக்கு பதிலாக 30 வினாடிகள் கொண்ட NON SKIP விளம்பரங்களை காண்பிக்கப்படவுள்ளது.  இந்த செயல் முறை விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
Previous articleகர்நாடக மாநிலத்தில் பாஜக தோல்வி!! மீம்ஸ்களால் கலாய்க்கப்படும் அண்ணாமலை!!
Next articleவிஜய் சேதுபதியின் அடுத்த படம்!! மலேசியாவில் கோலாகலமாக நடந்த பூஜை!!