ஆகஸ்டு 15 ஆம் தேதி பிறகு மதுபான கடைகள் மூடல்.. அரசுக்கு விதித்த காலக்கெடு!!
ஒவ்வொரு ஆட்சியிலும் பூரண மதுவிலக்கு வேண்டுமென மக்கள் கேட்டு வரும் நிலையில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அதனின் தாக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. ஏனென்றால், அதிமுக ஆட்சியின் போது பூரண மதுவிலக்கு என்பதை அமல்படுத்தாவிட்டாலும் அதனை குறைக்கும் விதத்தில் நேரம் மாற்றம் போன்றவற்றை கொண்டு வந்தனர்.
ஆனால் தற்போதைய ஆட்சியில் இருக்கும் திமுகவோ ஒவ்வொரு முறை பண்டிகை வரும்போதும் இத்தனை கோடிக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று ஒரு தொகையை நிர்ணயித்து உத்தரவிட்டு விடுகிறது. அதுமட்டுமின்றி திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் இளைஞர்களிடம் கஞ்சா மற்றும் மது மீதான போதை மோகம் அதிகரித்து உள்ளது.
அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரம் தமிழகத்தையே உலுக்கியது. கள்ளச்சாராயம் விற்பனை செய்யக்கூடாது என்று தடை விதித்த போதிலும், எவ்வாறு இதனை விற்பனை செய்ய அனுமதி அளித்தனர், இதனை யாரும் கண்டு கொள்ளவில்லையா என்ற வகையில் பல கோணங்களில் கேள்விகள் எழுகின்றது.
இதையெல்லாம் வைத்து பார்க்கையில் திமுக ஆட்சியானது இதை அனைத்தையும் தெரிந்து கொண்டு கண்டும் காணாமல் உள்ளது போல இருக்கிறது. இவர்களின் இந்த உச்சக்கட்ட செயலால் தான் அனைத்துக் கட்சிகளும் இந்த பூரண மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என்பதில் ஒற்றுமையாக உள்ளனர். அந்த வகையில் பாமக அன்புமணி ராமதாஸ் என தொடங்கி அதிமுக எடப்பாடி பழனிச்சாமி வரை அனைவரும் இதற்கு எதிராக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இவர்களின் வரிசையில் தற்பொழுது புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பூரணம் மது விலக்கை அமல்படுத்த வில்லை என்றால் நாங்களே இழுத்து மூடி விடுவோம் என எச்சரித்துள்ளார். அது மட்டும் இன்றி இதற்கென்று ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை காலகக்கெடுவும் கொடுத்துள்ளார். சுதந்திர தின விழாவிற்கு அடுத்த நாள் பூரண மதுவிலக்கு அமல்படுத்தவில்லை என்றால் நாங்களே முன்வந்து அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளையும் மூடுவோம் என்று கூறியுள்ளார்.