100 பேர் ஏறினாலும் உடையாத பாலம்! அதிகாரிகளுக்கு புதுச்சேரி அமைச்சர் உத்தரவு!!

0
193
#image_title
100 பேர் ஏறினாலும் உடையாத பாலம்! அதிகாரிகளுக்கு புதுச்சேரி அமைச்சர் உத்தரவு!
புதுச்சேரியில் புகழ் பெற்ற நோணாங்குப்பம் சுற்றுலா தலத்தில் ஆற்றுப்பாலம் உடைந்து விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்தை ஆய்வு செய்த புதுச்சேரி அமைச்சர் லட்சுமிநாராயணன் அவர்கள் 100 பேர் பாலத்தின் மேல் ஏறினாலும் பாலம் உடையாத அளவுக்கு பலமாக கட்ட வேண்டும் என்று அதிகாரிக்குளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் அதாவது மே 20ம் தேதி புதுச்சேரியில் நோணாங்குப்பத்தில் உள்ள படகு கழாம் மூலம் பயணிகள் பாரடைஸ் பீச் பகுதிக்கு படகு சவாரி மூலம் சென்றனர். அந்த சமயம் சுற்றுலா முடிந்து  மீண்டும் படகு குழாமிற்கு திரும்ப ஆற்றுபாலத்தில் 20 பயணிகள் ஒரே சமயத்தில் ஏறினர். இதனால் இந்த பாலம் பாரம் தாங்காமல் உடைந்து உள்வாங்கியது.
சுற்றுலா பயணிகள் அனைவரும் தண்ணீரில் விழுந்து தத்தளித்தனர். அங்கு பணி செய்த படகு குழாம் ஊழியர்கள் சுற்றுலா பயணிகள் அனைவரையும் மீட்டனர். இருந்தாலும் நேற்று வழக்கம் போல் படகு சவாரி தொடங்கப்பட்டது.
தகவல் அறிந்து புதுச்சேரி நோணாங்குப்பம் படகு குழாமுக்கு வந்த அமைச்சர் லட்சுமி நாராயணன் அவர்கள் உடைந்த நிலையில் இருந்த பாலத்தை பார்வையிட்டார். பிறகு அதிகாரிகளை சந்தித்து 100 பேர் ஏறினாலும் உடையாத அளவிற்கு பனை மரத்தால் நன்கு பலமான பாலமாக அமைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
Previous articleகோடை வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி போகுமா? அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!!
Next articleஜூலை 12ம் தேதி சந்திராயன் 3 விண்ணில் பாய்கிறது! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு!!