ஜூலை 12ம் தேதி சந்திராயன் 3 விண்ணில் பாய்கிறது! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு!!

0
216
#image_title
ஜூலை 12ம் தேதி சந்திராயன் 3 விண்ணில் பாய்கிறது! இஸ்ரோ நிறுவனம் அறிவிப்பு!
வரும் ஜூலை மாதம் 12ம் தேதி சந்திராயன் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ  அறிவித்துள்ளது.
சந்திராயன் 3 விண்கலம் திட்டம் சுமார் 615 கோடி ரூபாய் செலவில் இந்த விண்கலம் செயல்படுத்தப்பட்டு இந்த விண்கலம் ஜூலை 12ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது. பின்னர் மீண்டும் ஆகஸ்ட் 22ம் தோதி சந்திராயன் 3 விண்கலம் தரையிறக்கப்படவுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ விஞ்ஞானிகள் “நிலவு பற்றிய ஆய்வுக்கு சந்திராயன் 3 விண்கலத்தை தென் துருவத்தில் தரையிறக்க வேண்டியது அவசியம். அதை கருத்தில் கொண்டு லேண்டர் மற்றும் ரோவர்கலன்கள் நன்கு மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு விதமான மாற்றங்கள் கொண்ட இந்த சந்திராயன் 3 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் வரும் ஜூலை மாதம் 12ம் தேதி விண்ணில் ஏவப்படவுள்ளது.
சந்திரன் 2 விண்கலம் போல இல்லாமல் சந்திராயன் 3 விண்கலம் 42 நாட்களுக்கு பிறகு மீண்டும் பூமியில் தரையிரக்கப்படவுள்ளது. இந்த திட்டம் வெற்றி பெறுவதை அடுத்து நிலவை பற்றி பல ரகசியங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.
அதற்கு முன்னர் என்விஎஸ்-2 எனப்படும் வழிகாட்டுதல் செயற்கை கோள் மே 29ம் தேதி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது” என்று கூறினர்.
இதற்கு முன்னர் நிலவை ஆய்வு செய்ய 2008ம் ஆண்டு சந்திராயன் 1 விண்கலமும், 2019ம் ஆண்டு சந்திராயன் 2 விண்கலமும் விண்ணில் ஏவப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Previous article100 பேர் ஏறினாலும் உடையாத பாலம்! அதிகாரிகளுக்கு புதுச்சேரி அமைச்சர் உத்தரவு!!
Next articleஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா! சிறந்த நடிகருக்கான விருதை விஜய் வென்றார்!!