இன்று நடைபெறும் குவாலிபையர் போட்டி! வரலாறு படைக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
ஐபிஎல் தொடரின் இறுதிக்கட்டமான பிளே ஆப் சுற்றுகள் இன்று தொடங்குகின்றது. பிளே ஆப் சுற்றுகளின் முதல் குவாலிபையர் போட்டி இன்று இரவு தொடங்குகிறது.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, ராஜஸ்தான், குஜராத், ஹைதராபாத் உள்பட பத்து அணிகள் பங்கேற்றது. ஒவ்வொரு அணியும் பிளே ஆப் சுற்றுகளுக்கு தகுதி பெறுவதற்கு கடினமாக போராடியது.
லீக் சுற்றுகளின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி முதல்ஜிடத்திலும், சென்னை சூப்பர் கிங்கிஸ் அணி இரணடாவது இடத்தையும், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி மூன்றாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி நான்காவது இடத்தையும் பெற்று பிளே ஆப் சுற்றுகளுக்கு தகுதி பெற்றது.
இதில் முதல் குவாலிபையர், எலிமினேட்டர், இரண்டாம் குவாலிபையர் பின்னர் இறுதிப்போட்டி நடக்கவுள்ளது.
முதல் குவாலிபையர் சுற்றில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு நுழைந்து விடும். எலிமினேட்டர் சுற்றில் வெற்றி பெறும் அணியும் முதல் குவாலிபையர் சுற்றில் தோல்வி பெற்ற அணியும் இரண்டாவது குவாலிபையர் சுற்றில் விளையாடும். இரண்டாவது குவாலிபையர் சுற்றில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.
அதன்படி இன்று முதல் குவாலிபையர் சுற்று நடக்கவுள்ளது. முதல் குவாலிபையர் சுற்றில் நடப்பு சேம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியும் நான்கு முறை சேம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதவுள்ளது. இந்த போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இது வரை குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மூன்று போட்டிகளில் நேருக்கு நேர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியுள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் வெற்றிகரமாக குஜராத் டைட்டன்ஸ் அணி வென்றுள்ளது. இதையடுத்து சென்னையில் இன்று நடைபெறும் முதல் குவாலிபையர் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று சாதனை படைக்கும் முனைப்பிலும் இறுதிப்போட்டிக்குள் நுழையும் நோக்கத்திலும் விளையாடவுள்ளது.