ஜூன் 7ம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதி போட்டி!! பரிசுத் தொகையை அறிவித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்!!

Photo of author

By Sakthi

ஜூன் 7ம் தேதி தொடங்கும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதி போட்டி!! பரிசுத் தொகையை அறிவித்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்!!
உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டிக்கான பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.அடுத்த மாதம் அதாவது ஜூன் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடக்கவுள்ளது. ஜூன் 7ம் தேதி தொடங்கும் இந்த உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 11ம் தேதி முடிகிறது.
இந்த உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இரண்டு இடங்களில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா அணிகள் மோதவுள்ளது. உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டிக்காக பயிற்சி எடுக்க இந்திய அணி வீரர்கள் சிலர்(ஐபிஎல் தொடரில் பங்கேற்காத வீரர்கள்) லண்டன் ஓவல் மைதானத்திற்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் சென்றனர்.
2013ம் வருடத்திற்கு பிறகு இந்திய அணி எந்தவொரு ஐசிசி பட்டத்தையும் வெல்ல வில்லை. அதனால் ஐசிசி நடத்தும் இந்த உலக டெஸ்ட் ஷேம்பியன்ஷிப் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் கடும் பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டிக்கான பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. அதன்படி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் கோப்பையை வெல்லும் அணிக்கு 13.2 கோடி ரூபாய் வழங்கவுள்ளதாகவும், உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் போட்டியில் தோற்கும் அணிக்கு 6.5 கோடி ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.