குன்னூரில் 63வது பழக் கண்காட்சி! இன்று முதல் தொடக்கம்!
குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 63வது பழக் கண்காட்சி இன்று அதாவது மே 27ம் தேதி தொடங்கியது. 63வது பழக் கண்காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் கோடை விழா சில வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது. இதில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இதன் ஒரு பகுதியாக குன்னூரில் உள்ள சிம்ஸ் பூங்காவில் 63வது ஆண்டு பழக் கண்காட்சி தொடங்கியுள்ளது.
இந்த 63வது பழக் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை வரவேற்க 12 அடியில் 1.5 டன் பழங்களை கொண்டு நுழை வாயில் அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் 18 அடி உயரம் 5 அடி அகலம் கொண்ட பல பழங்களால் வடிவமைக்கப்பட்ட மிகப்பெரிய பைனாப்பிள், பழக்கூடை, பிரமிடு, மண் புழு, மலபார் அணில் என 3650 கிலோ பழங்களை கொண்டு பல்வேறு உருவங்கள் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பழக்கண்காட்சி இன்று மற்றும் நாளை அதாவது மே 27 மற்றும் மே 28 என இரண்டு நாட்கள் நடக்கும் எனவும் நாளையுடன் நிறைவு பெறும் இந்த விழாவில் போட்டியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.