தாய்மார்கள் வங்கி கணக்கில் 15000 டெபாசிட்!! வெளிவந்த புதிய தகவல்!!
ஆந்திர மாநிலம் சட்டமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் அறிக்கையை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சநதிரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரம் பகுதியில் உள்ள வேமகிரியில் என்.டி.ராமாராவ் நூற்றாண்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்தால் செய்யப் போகும் நலத்திட்டங்களுக்கான முதல் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள்:
1. மகா சக்தி திட்டத்தின் கீழ் 18 வயது நிரம்பிய பெண்களின் வங்கிக் கணக்கில் ஒவ்வொரு மாதமும் 1500 ரூபாய் டெபாசிட் செய்யப்படும். பெண்களுக்கு உதவித்தொகை 59 வயது வரை வழங்கப்படும்.
2. தள்ளி வந்தனம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தையின் கல்விக்காகவும் தாய்மார்களின் வங்கி கணக்கில் ஆண்டுக்கு 15000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும்.
3. மாவட்ட எல்லைகளுக்குள் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
4. தீபம் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டு ஒவ்வெரு வீட்டிற்கும் ஆண்டுக்கு 3 கியாஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்.
5. அன்னதாதா திட்டத்தின் கீழ் விவசாயிகளின் துயரத்தை போக்க ஆண்டுக்கு 20000 நிதியுதவி அளிக்கப்படும்.
6. தெலுங்கு தேசம் ஆட்சியின் 5 ஆண்டுகளில் 2 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
7. வேலையில்லாத நபர்களுக்கு மாதம் 3000 ரூபாய் வேலைவாய்ப்பின்மை நிவாரண நிதியாக வழங்கப்படும்.
8. பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்கவும், துஷ்பிரயோகங்களை தடுக்கவும் ரக்சனா கோஷம் என்ற கடுமையான திட்டம் வகுக்கப்படும்.
9. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கு 2 குழந்தைகள்தான் இருக்க வேண்டும் என்ற விதிமுறை ரத்து செய்யப்படும் எனறு கூறினார்.
தொடர்ந்து பேசிய தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்கள் “மக்களிடம் கருத்துக்களை பெற்ற பிறகு தசரா பண்டிகையின் பொழுது இரண்டாம் கட்ட தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.
தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்ததும் இந்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்கிறேன். வரவிருக்கும் தேர்தலில் தெலுங்கு தேசம் மக்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். என்னை நம்புங்கள். நான் ஆந்திராவுக்கு பிரகாசமான எதிர்காலத்தை தருவேன்” என்று கூறியுள்ளார்.