கொடைக்கானல் மலர் கண்காட்சி நிறைவு பெற்றது! வருவாய் மட்டும் இவ்வளவு லட்சம்!!

0
181
#image_title

கொடைக்கானல் மலர் கண்காட்சி நிறைவு பெற்றது! வருவாய் மட்டும் இவ்வளவு லட்சம்!

கொடைக்கானலில் நடைபெற்று வந்த மலர் கண்காட்சி நிறைவு பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் மலர் கண்காட்சி மூலமாக கிடைத்த வருவாய் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கோடை விடுமுறையை ஒட்டி பல சுற்றுலாப் பயணிகள் வந்து குவிந்தனர். இவர்களை மகிழ்விக்கும் வகையில் கடந்த 26ம் தேதி கோடை விழா மலர் கண்காட்சி தொடங்கப்பட்டது.

3 நாட்கள் மட்டுமே நடைபெறும் இந்த மலர் கண்காட்சி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டதால் மலர் கண்காட்சி நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மலர் கண்காட்சி மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நேற்று மலர் கண்காட்சி நிறைவு பெற்றது.

இந்த மலர் கண்காட்சியில் சுமார் 1 கோடிக்கும் மேலான மலர்கள் பூத்துக் குலுங்கியது. இது சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகையால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடுத்த வாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில் சுற்றுலா பயணிகள் பலரும் சொந்த ஊர் திரும்ப தொடங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு 6 நாட்கள் நடந்த மலர் கண்காட்சியை 59000 சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். கடந்த ஆண்டு மலர் கண்காட்சி மூலமாக கிடைத்த வருவாய் 19 லட்சமாக இருக்க இந்த ஆண்டு வருவாய் சற்று அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு மலர் கண்காட்சியை காண 65,971 பேர் வருகை தந்துள்ள நிலையில் இந்த ஆண்டு மலர் கண்காட்சி மூலமாக கிடைத்த வருவாய் 20,27775 ரூபாய் என பூங்கா நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.

 

Previous articleரேஷன் கார்டில் உடனே ஆதாரை இணையுங்கள்.. இல்லையென்றால் குழந்தைகளின் பெயர் நீக்கம்? தமிழக அரசு அதிரடி உத்தரவு!!
Next articleதலைவர் 170 படத்தின் அப்டேட்! ரஜினிக்கு வில்லனாக நடிக்கும் பிரபல நடிகர்!!