பலத்த காற்றுடன் மழை தொடங்கியது! மரங்கள் முறிந்ததால் போக்குவரத்து நிறுத்தம்!!

0
230
#image_title

பலத்த காற்றுடன் மழை தொடங்கியது! மரங்கள் முறிந்ததால் போக்குவரத்து நிறுத்தம்!

 

குஜராத் மாநிலத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. மரங்கள் முறிந்தி விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

 

அரபிக் கடலின் கிழக்கு மத்திய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந்த மாதத்தின் தொடக்கத்தில் உருவானது. அதன் பிறகு இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு பிபோர்ஜோய்  என்று பெயர் வைக்கப்பட்டது.

 

பிபோர்ஜோய் புயல் வடக்கு திசையை நோக்கி சில தினங்களாக நகர்ந்து வந்தது. இந்நிலையில் இந்த புயல் தீவிர புயலாகவும் அதி தீவிர புயலாகவும் மாறியது. வடகிழக்கு அரபிக்கடலில் நிலை கொண்டிருந்த பிபோர்ஜோய் அதி தீவிர புயல் குஜராத்தின் போர்பந்தரில் 150 கிலோ மீட்டர் தொலைவில் இன்று காலை நிலை கொண்டிருந்தது. இந்த புயல் நாளை அதாவது ஜூன் 15ம் தேதி குஜராத்தின் ஜாக்ஹா துறைமுகப் பகுதியில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

இந்த அதிதீவிர புயல் கரையை கடக்கும் பொழுது பலத்த காற்றும் பலத்த மழையும் பெய்யும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குறிப்பாக மணிக்கு 125 கிலோ மீட்டர் முதல் 150 கி.மீ வேகம் வரை சூறாவளி காற்று வீசும் என்று கூறப்பட்டு உள்ளது.

 

அதன்படி மஹாராஷ்டிரா மாநிலம் , குஜராத் மாநிலங்களில் நேற்று முதல் பலத்த மழையும் மிக பலத்த சூறாவளிக் காற்றும் வீசத் தொடங்கியுள்ளது. இன்று காலை முதல் குஜராத் மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகின்றது. இந்த மழையால் பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. பல இடங்களில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளது. இதையடுத்து குஜராத் மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 95 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

 

அதிதீவிர புயலான பிபோர்ஜோய் புயல் நாளை கரையை கடக்கும் பொழுது மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதையடுத்து பேரிடர் மீட்பு குழுவின் 17 படைவீரர்கள் குஜராத் கடலோர பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

 

புயல் காரணமாக குஜராத் மாநிலத்தின் கடலோர மாவட்டமான கட்ச் பகுதியில் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. அங்கு பள்ளி கல்லூரிகளுக்கு இன்று முதல் மூன்று நாட்களுக்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. புயல் அபாயம் உள்ள இதர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 6 மாநிலங்களில் பலத்த மழை பெய்யும் என்று இன்று காலை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

புயல் கரையை கடக்கும் பொழுது பலத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே இந்த புயலை எதிர்கொள்வது தொடர்பாக குஜராத் மாநில முதல் மந்திரி பூபேந்திர படேல் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மாநில பேரிடர் மீட்பு படை, தேசிய பேரிடர் மீட்பு படை, கடற்படை வீரர்கள் அனைவரும் கட்ச், சவுராஷ்டிரா பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். கடற்கரையின் ஓரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 40 ஆயிரம் மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

Previous articleதிரிஷ்யம் 3 திரைப்படத்தை இயக்க திட்டம்! வெளியான முக்கிய அறிவிப்பு!!
Next articleபக்தர்கள் கவனத்திற்கு!! திருப்பதி சுவாமி தரிசனத்தில் புதிய மாற்றம்!!