முக்கியமான கட்சியில் இருந்து நடிகர் விஜய்க்கு வந்த அரசியல் அழைப்பு!! ஏற்றுக் கொள்வாரா நடிகர் விஜய்!!
தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்பி ஒருவர் நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தால் அவரை காங்கிரஸ் கட்சியில் சேர்த்துக் கொள்ள ஆவலுடன் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
நடிகர் விஜய் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் அவருடைய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறார்.அதைப் போல சமீபத்தில் உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு ஒரு நேர உணவு மட்டும் ஏற்பாடு செய்து விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்கள் மூலமாக வழங்கினார்.234 தொகுதிகளிலும் நடிகர் விஜய் அவர்கள் உணவு வழங்கியது அரசியல் நகர்வாக பார்க்கப்பட்டது.
இதற்கு மத்தியில் நடிகர் விஜய் ஜூன் 17ம் தேதி சென்னை நீலாங்கரையில் 2023ம் ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 234 தொகுதிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி தொகுதியும், சான்றிதழும் வழங்கினார்.அரசியல் தலைவர்கள் மத்தியில் இந்நிகழ்வு நடிகர் விஜய் அரசியலுக்குள் வருவதற்கான அடுத்தகட்ட நகர்வை செய்துள்ளார் என்று பேசப்பட்டது.
மேலும் அவ்வப்போது விஜய் மக்கள் இயக்கத்தின் உறுப்பினர்களுடன் சங்க நிர்வாகிகளுடனும் அவ்வப்போது பொதுக்கூட்டம் நடத்தி தொகுதிகளின் விவரங்களை கேட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.எது எப்படியோ நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்குள் வந்துவிடுவார் என்பது போலத்தான் கிடைக்கும் தகவல்களும் உள்ளது.மேலும் நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வருவாரா அல்லது வரமாட்டாரா என்ற சந்தேகமும் அரசியல் தலைவர்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் அவர் அரசியலில் வரவேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் கன்னியாகுமரி மாவட்டத்தின் எம்பி விஜய் வசந்த் அவர்கள் பேசியுள்ளார்.அதாவது நடிகர் விஜய் அவர்களை காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளின் கூட்டணியில் இணைக்க தயாராக இருக்கிறோம்.ஆனால் காங்கிரஸ் கட்சி மேலிடம் தான் இதை முடிவு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதே போல தமிழக பாஜக கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்களும் நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தால் அவரை பாஜக கட்சியில் சேர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று கூறியிருந்தார்.நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தால் காங்கிரஸ் கட்சியுடன் இணைவாரா அல்லது பாஜக கட்சியுடன் இணைவாரா இல்லை விஜய் மக்கள் இயக்கத்தை வைத்து தனியாக கட்சி தொடங்குவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.