வம்பிழுக்கும் வன்னியரசின் நாக்கை என்ன செய்வார் மருத்துவர் ராமதாஸ்?
தமிழகத்தில் பெரியார் கொள்கை என்ற பெயரில் தொடர்ந்து சாதி மறுப்பு கொள்கைகளை பேசி வரும் அரசியல் அமைப்புக்கள் கலப்பு திருமணம் செய்து வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளன. இதில் சில அரசியல் கட்சி தலைவர்கள் ஒரு குறிப்பிட்ட சமுதாய பெண்களை மட்டும் குறி வைத்து காதலிக்க சொல்லும் விதமாக கடந்த கால பேச்சுகள் அமைந்துள்ளன.
இதை பாமக நிறுவனர் ராமதாஸ் ஆரம்பத்திலிருந்து எதிர்த்து வருகிறார். மேலும் இது போல அரசியல் மற்றும் பண ஆதாயத்திற்காக சிலரால் தூண்டப்பட்டு நடத்தப்படும் நாடக காதலை அவர் தொடர்ந்து கண்டித்து வருகிறார். மேலும் அவ்வப்போது பெற்றோர்களுக்கும் பெண்களுக்கும் முறையான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கி வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் நாடக காதலை தோலுரித்து காட்டும் விதமாக திரௌபதி திரைப்படம் வெளியாகி தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பெரும்பாலான தமிழக மக்களும் நாடக காதலுக்கு பலியான குடும்பங்களும் இந்த படத்தை வரவேற்று கொண்டாடி வருகின்றனர்.
இந்த சூழலில் தான் வழக்கம் போல பெரியார் அமைப்பை சேர்ந்தவர்கள் சேலம் மாவட்டத்தில் ஒரு கலப்பு திருமணத்தை நடத்தி வைத்தனர். அதாவது ஈரோடு மாவட்டம் அந்தியூரை அடுத்த கவுந்தர்பாடி பகுதியை சேர்ந்தவர் செல்வன் என்பவரும், குருப்பநாய்க்கம்பாளையம் பகுதியை சேர்ந்த இளமதி என்பவரும் காதலித்து வந்ததாகவும், வெவ்வேறு சாதி என்பதால் இவர்களுக்கு எதிர்ப்பு எழுந்ததாகவும் கூறி பெரியார் அமைப்பினர் கலப்பு திருமணத்தை நடத்தி வைக்க முயற்சித்துள்ளனர்.
திராவிடர் கழகம் சார்பில் சேலம் மாவட்டம் காவலாண்டியூரில் இவர்களுக்கு சாதி மறுப்பு திருமணம் செய்து வைக்க முயற்சித்த போது அங்கு வந்த எதிர் தரப்பினர் அவர்களிடமிருந்து பெண்ணை காப்பாற்றி சென்றுள்ளனர். இதனையடுத்து பெண்ணை கடத்தி சென்றதாக தி.க அமைப்பினர் புகார் கொடுக்க கடந்த 14 ஆம் தேதி மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இளமதி ஆஜர் ஆனர். அங்கு நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தன்னுடைய பெற்றோருடன் செல்வதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சாதி மறுப்பு இயக்கங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பல்வேறு வகையான விமர்சன கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் நாடக காதலை தொடர்ந்து எதிர்த்து வரும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு கட்சி கூட்டத்தில் பேசிய மருத்துவர் ராமதாஸ் இனிமேல் யாராவது மரவெட்டி என்று சொன்னால் அவர்கள் நாக்கை வெட்டிவிட்டு தான் பதில் சொல்ல வேண்டும் என்று கூறியிருந்தார். அந்த வகையில் தற்போது வன்னியரசு பதிவிட்டுள்ள டிவிட்டர் விமர்சன பதிவில் மரவெட்டி ராமதாஸ் என்று குறிப்பிட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் அல்லது நிர்வாகிகள் என்ன எதிர் வினையாற்ற போகிறார்கள் என்ற கேள்வி கட்சி தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது.