மீண்டும் புதிய மொபைல் போனை அறிமுகம் செய்யும் ஜியோ நிறுவனம்! இதன் விலை இவ்வளவு தானா!!

Photo of author

By Sakthi

மீண்டும் புதிய மொபைல் போனை அறிமுகம் செய்யும் ஜியோ நிறுவனம்! இதன் விலை இவ்வளவு தானா!!

 

இந்தியாவில் முன்னணி தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் மீண்டும் ஒரு புதிய மொபைல் போனை அறிமுகம் செய்யவுள்ளது.

 

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி அவர்களின் தொலை தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் பகுதியான ரிலையன்ஸ் ஜியோ இன்போஃகாம் நிறுவனம் மலிவு விலையில் இணையவசதி கொண்ட மொபைல் போனை வாடிக்கையாளர்களின் வசதிக்கு தகுந்தது போல அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த மலிவு விலை இணையவசதி கொண்ட மலிவு விலை மொபைல் போன் மக்களிக்கு மத்தியில் டிஜிட்டல் முறையின் பயன்பாட்டை அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

ஜியோ பாரத் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இணையவசதி கொண்ட இந்த மொபைல் போன் மக்களுக்காக குறைந்த விலையான 999 ரூபாய்க்கு விற்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

இந்தியாவில் சுமார் 25 கோடி மககள் 2ஜி நெட்வொர்க் பயன்படுத்துபவர்களாக இருக்கும் நிலையில் உலகமே 5ஜி நெட்வொர்க்கின் விளிம்பில் நின்று கொணடு இருக்கின்றது. இதற்கு நடுவே ஆகாஷ் அம்பானி அவர்கள் இந்த புதிய ஜியோ பாரத் குறைந்த விலை உள்ள மொபைல் போன் பற்றி அறிவித்துள்ளார்.

 

இந்த ஜியோ பாரத் மொபைல் போனில் 4ஜி நெட்வொர்க் வசதி உள்ளது. ஜியோ சினிமா செயலியை பயன்படுத்திக் கொள்ளலாம். யூபிஐ பயன்படுத்தி பணம் அனுப்பவும் பெறவும் முடியும். இது போல பல வசதிகளை ஜியோ பாரத் போன் கொண்டுள்ளது.

 

இந்த ஜியோ பாரத் போன்கள் வரும் ஜூலை 7ம் தேதி முதல் 10 லட்சம் ஜியோ பாரத் மொபைல் போன்களை பீட்டா அடிப்படையில் சோதனை செய்ய ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் முடிவு செய்துள்ளது.